பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் விமானங்கள்!

Date:

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்கள் கட்டுப்பாட்டை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லெபனான் மற்றும் காசாவில் குண்டுமழை பொழியத் தொடங்கியன.

இதனால் இஸ்ரேல் பலஸ்தீன ராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை மூண்டது.

ஒரு நாள் முன்பாக ஜெரூசலேமில் மசூதி ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில் லெபனான் தலைநகரில் இருந்து இயங்கும் பலஸ்தீன ஆயுதப்படைகள் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் வீச்சு நடத்தின.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டுவீசின.

நமது எதிரிகள் நம்மை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு காணொளி உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...