பால் மாவின் விலை மேலும் குறையும்!

Date:

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது , அதன்படி 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 1120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு கிலோ பால் மாவின் விலை 3100 ரூபாவிலிருந்து 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...