பி.பி.சி நிறுவனத்தின் தலைவர் திடீர் இராஜினாமா!

Date:

பி.பி.சி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.பி.சி நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின்  ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்  பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப் பெரும் நன்கொடையாளராக இருந்து வருகிறார்.

கடந்த, 2021 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய அளவில் (ஒரு பில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளார்.

அதற்கு பரிசாக தான் அரசாங்கத்தின் பரிந்துரையின்படி, அவர் பி.பி.சி., தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

எனவே ரிச்சர்ட் ஷார்ப் நியமனம் பி.பி.சி.யின் நடுநிலைதன்மை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.  இதையடுத்து, ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...