இன்று பேரூந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
25 அல்லது 30 பேரூந்துகள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டுநர் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மாத்திரம் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பேரூந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...