மீண்டும் பணிக்கு திரும்ப விசேட போக்குவரத்து!

Date:

புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் சில விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் விசேட பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்காகவும், பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம், 10 முதல் 15 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முதல், 25 முதல் 50 சதவீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...