மெதகெகிய ஸ்ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா!

Date:

தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கழக உறுப்பினர்களுக்கு இடையிலான MPL – 2023 கிரிக்கெட் தொடர் இம்முறையும் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக பொது மைதானத்தில் கடந்த 23 மற்றும் 24ம் திகதிகளில் இடம்பெற்றது.

லீக் முறையில் இடம்பெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் சாம்பியனாக மனாப் அவர்களின் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணி முடி சூடிக்கொண்டது.

இரண்டாம் இடத்தை சிபான் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துக் கொண்டது.

இந்த தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ரெட் பெக்ஸ் அணியின் தலைவர் சியாம் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணியின் சப்ராத் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிப்லான் தெரிவானார்.

(பவாஸ் – தகவல் அதிகாரி – அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...