ஸஹ்ரானின் வண்ணாத்துவில்லு தோட்டத்தில் புதையல் தோண்ட முயற்சித்த அதிரடிப்படையினர் இருவர் கைது!

Date:

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில்  உள்ள  இடம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

புதையலை  பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் சோதனை நடத்தப்பட்டபோது தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய நபரை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...