ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது.
இதுபற்றி தேசிய நிலஅதிர்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மே 9ஆம் திகதி அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கு 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 4.3 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமீபகாலமாக தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.