இலங்கையில் கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்கு இலக்கான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
30 ஆம் திகதி 7 புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன், அன்றைய தினம் ஒரு கொவிட் மரணமும் பதிவாகியுள்ளது.
இதன்படி, நேற்றிரவு நிலவரப்படி, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து நூற்று எண்பத்து மூன்றாக (672,183) உயர்வடைந்துள்ளது.
இந்த வெசாக் வாரத்தில் பெரும்பாலானோர் தமது ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி அனைவரும் முகக்கவசம் அணிவது சிறந்தது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.