‘சிறுநீரக நோயாளர்கள், வயோதிபர்களுக்கான உதவிகள் தொடரும் ‘

Date:

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான நிதியுதவி தொடரும் என இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் எவ்வித குறைப்புமின்றி தொடரும் என இராஜாங்க அமைச்சர்   தெரிவித்துள்ளார்.

பொது வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் பயனாளிகள் போன்ற பிரிவுகளின் கீழ் நிதி உதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 520,000 க்கும் அதிகமான மக்களுக்கு வழமைப் போன்று அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவி வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...