ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று!

Date:

வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளை (12) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள டெலோ மற்றும் புளொட் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இனப் பிரச்சினைக்கு தீர்வு – சமஷ்டி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக புளொட் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது வட மாகாண அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை(12) அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், அதில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் வடக்கு, கிழக்கின் அதிகாரப் பகிர்வு மற்றும் காணிப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் இந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...