டீசல் விலை குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும்!

Date:

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால், டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விலை குறைப்போடு ஒப்பிடும்போது பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறைக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப, பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில், கணிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரென்டா அது தொடர்பில் தெரிவிக்கையில், மேற்படி கணிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவுற்றதும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தற்போது குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கேற்ப, பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு கிடையாது, அவ்வாறு பஸ் கட்டணம் குறைக்கப்படுமானால் பஸ் போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...