Thursday, October 29, 2026

தமிழகத்தில் தற்போது 92,000 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாக உள்ளனர்: வெளிவிவகார அமைச்சர்

1 min read

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , 92,435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.