தாய்வானுக்கு ஆதரவு வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: சீனா எச்சரிக்கை!

Date:

தாய்வானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது.

அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதனையடுத்து தாய்வான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தாய்வானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...