தேர்தலில் வெற்றி பெற்ற துருக்கி ஜனாதிபதி எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!

Date:

20 ஆண்டுகால ஆட்சிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளுடன் துருக்கியின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார் என்று உச்ச தேர்தல் கவுன்சிலின் தலைவர் அஹ்மத் யெனர் நேற்று முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள 64 மில்லியனுக்கும் அதிகமான துருக்கியர்கள் வாக்களித்ததுடன் ஒக்டோபரில் பணவீக்கம் 85 சதவீதமாக உயர்ந்ததையும் பெப்ரவரியில் 50,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற பூகம்பங்களையும் கண்ட வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் பின்னணியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

துருக்கியில் நடக்கும் தேர்தல் முடிவுகள் உலக நடப்பிற்கு பாதிப்பு உள்ளது என்பதால், உலக நாடுகள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது.

துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும், ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 1923ல் ஜனநாயக நாடாக உருவான துருக்கி, தன் 100வது ஆண்டில் காலடி வைத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது.

இதேவேளை நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற எர்டோகானுக்கு உலகத்தலைவர்களும் நாடுகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதற்கமைய மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகனுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அவர் எதிர்நோக்குகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

எர்டோகனின் வெற்றிக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட தூதர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களில் நேட்டோ நட்பு நாடுகளாக தொடர்ந்து இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்’ என்று பைடன் தனது டுவிட்டர் தளததில் தெரிவித்தார். கூறினார்.

வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் துருக்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று அவர் கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், எர்டோகனின் வெற்றி, ‘தன்னலமற்ற பணி’ மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினர்.

மேலும், கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி எர்டோகன் தனது புதிய பதவிக்காலத்தில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் என் அன்பு சகோதரர் எர்டோகன், உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் புதிய பதவிக்காலத்தில் நீங்கள் வெற்றியடைய விரும்புகிறேன், மேலும் நமது வலுவான இருதரப்பு உறவுகளுக்கு முன்னேற்றம் மற்றும் செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் துருக்கிய மக்கள் விரும்புவதை நீங்கள் அடைய விரும்புகிறேன்.

 

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி எர்டோகனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ‘நமது நாடுகளின் நலனுக்கான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்’ அவர் நம்புவதாகக் கூறினார்.

இதேவேளை தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகனுக்கு சவூதி ஆட்சியாளர் மன்னர் சல்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸும் துருக்கியும் ‘தொடர்ந்து இணைந்து முன்னேறும்’ என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இங்கிலாந்து மற்றும் துருக்கி இடையே ‘வலுவான ஒத்துழைப்பை’ தொடர எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்,  எர்டோகனும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான ‘நல்ல உறவுகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்’ என்று ‘உறுதியாக’ இருப்பதாக கூறினார்.

மேலும், எர்டோகனின் ‘தேர்தல் வெற்றி’, ஜனாதிபதியின் வெற்றிகரமான திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் துருக்கிய மக்களின் நம்பிக்கையை புதுப்பித்ததாக லிபிய பிரதமர் அப்துல் ஹமிட் டிபீபா விவரித்தார்.

எர்டோகன் மற்றும் துருக்கிய மக்களின் ‘தேர்தல் வெற்றிக்காக’ பலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே பாராட்டினார்.
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, எர்டோகனின் மறுதேர்தல் ‘துருக்கி மக்களின் தொடர்ச்சியான மதிப்புமிக்க நம்பிக்கையின் அடையாளம்’ என்று கூறினார்.

விரைவு ஆதரவுப் படை துணை இராணுவக் குழுவிற்கு எதிராக சூடானின் இராணுவத்தை வழிநடத்தும் இராணுவத் தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், புதிய பதவிக் காலத்தை வென்ற எர்டோகனை வாழ்த்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ‘ ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு பலத்தின் தூணாகவும், அவர்களின் மறுக்க முடியாத உரிமைகளுக்காக உருக்கமான குரலாகவும் இருந்து வருகிறார்,’ என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...