மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு வைரஸ் நோய்: மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்கிறது சுகாதார  திணைக்களம்

Date:

மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெளிவுபடுத்திவுள்ளது.

இது தொற்றுநோய் அளவை எட்டவில்லை என சுகாதார  திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.

தேவையற்ற பீதி தேவையில்லை எனவும், அமைதி காக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் நோய் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனவும்அவர் பொதுமக்களுக்கு மேலும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பன்றி இனத்தின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் மாத்திரமே கவனம் செலுத்தப்படுகிறது.

டிஆர்ஆர்எஸ் எனப்படும் வைரஸ் நோய், பன்றிகளின் சுவாச மண்டலத்தை முதன்மையாக பாதிக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தாலும், வைரஸை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...