நாடுமுழுவதும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகள்!

Date:

எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடு முழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் ஒருகட்டமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள், குற்றவாளிகள், சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான விசேட சுற்றுநிரூபம் பொலிஸ்மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதும் அதன் ஒருகட்டமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை அடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படக்கூடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...