களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் ஆராய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை

Date:

களுத்துறை பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தமை மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கான செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் 16 வயதான சிறுமி உயிரிழந்தமை, மற்றுமொரு பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஆசியரியரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கையை கோரியுள்ளது.

இதற்கமைய குற்றச் செயலின் தன்மை, அது தொடர்பில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சமர்ப்பணங்கள், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதற்கான காரணம் என்பன தொடர்பில் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளின் போது ஏதேனும் முறைக்கேடுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றில் தங்களது தரப்பு சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...