புதிய விலை திருத்தங்களுடன் பால்மாவை கொள்வனவு செய்ய முடியும்: இறக்குமதியாளர்கள் சங்கம்

Date:

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் புதிய விலை திருத்தங்களுக்கு அமைய நுகர்வோர் பால்மாவை கொள்வனவு செய்ய முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி பால்மா அடங்கிய கப்பல்கள் இலங்கையை வந்தடையவிருந்தன. எனினும், அந்த கப்பல்கள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தாமதமடைந்துள்ளன.

இதன் காரணமாக தற்போதைய நாட்களில் உற்பத்திகள் இடம்பெறுவதில்லை. எனவே, புதிய பால்மா தொகை நாட்டை வந்தடைந்ததன் பின்னர், அவற்றை நாடளாவிய ரீதியாக புதிய விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பொதி 200 ரூபாவாலும் 400 கிராம் நிறையுடைய பால்மா பொதி 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...