நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும்!

Date:

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட பாரிய பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளுக்காக மின்பிறப்பாக்கி மூடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏனைய அனல் மின் நிலையங்களுடன் மின் உற்பத்தி நிர்வகிக்கப்படும்.

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கான 30ஆவது கப்பல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, தற்போது இலங்கை மின்சார சபையின் நிலக்கரி தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின்சார சபை தொழிற்சங்கங்கள் மற்றும் சில ஊடகங்கள் முன்னர் ஊகித்ததைப் போன்று மின்தடைகள் ஏற்படாது என அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...