பாதிக்கப்பட்ட சூடான் மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண நிதியம் 100 மில்லியன் டொலர் உதவி: இதுவரை 8,500 பேர் வெளியேறவும் உதவி!

Date:

சூடான் மக்களுக்காக, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும், அம்மக்கள் தற்போது அனுபவித்து வரும் இன்னல்களின் விளைவுகளைத் தணிக்க “சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யுமாறும், புனிதஸ்தலங்கள் இரண்டினதும் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் அவர்கள், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்திற்கு கடந்த ஞாயிறன்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உதவியானது இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் உத்தரவுக்கமைய, சகோதர சூடானிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான நெருக்கடியின் விளைவுகளைத் தணிப்பதற்குமாக வழங்கப்படுகிறது என அரச நிர்வாக மையத்தின் ஆலோசகரும், பொது மேற்பார்வையாளருமான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் அல்-ரபீஹ் உறுதிப்படுத்திக் கூறினார்.

அரச தலைமைத்துவத்தின் பணிப்புரைகளுக்கமைய, சூடான் குடியரசில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் எனவும், உலகின் எந்தப்பகுதியிலும் இன்னல்கள் படும் மக்களுக்கு வழமையாக உதவ முன்வருவது போல் இவ்வுதவிகளையும் வழங்குவதற்காக அனுமதி வழங்கிய இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலருக்கும் பட்டத்து இளவரசர் அவர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் சகோதர மற்றும் நட்பு நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட யமன் மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்த 453 பேர்களை கடந்த ஞாயிறன்று சவூதி அரேபிய மன்னருக்குச் சொந்தமான “அபஹா ” மற்றும் “ரியாத் ” என்ற கப்பல்கள் மூலம் ஜெத்தா நகரை வந்தடைந்தனர்.

சவூதி அரேபிய வான் படைக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் மூலம், சூடான், லெபனான், இந்தோனேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கென்யா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த 690 பேர்களும் அன்றைய தினம் ஜெத்தா நகரை வந்தடைந்தனர்.

அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் சவூதி அரேபியா அதீத ஆர்வம் காட்டி வருவதை கெளரவ தூதுவர் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 110 நாடுகளைச் சேர்ந்த 8,498 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 278 பேர் சவூதி பிரஜைகளாவர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...