வடக்கு , கிழக்கு பா.உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது!

Date:

வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஆரம்பமானது.

நேற்றைய பேச்சுவார்த்தையில் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, அதிகாரப் பரவலாக்கம், அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நேற்று கலந்துரையாடப்பட்ட காணிப் பிரச்சினை தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

காணி அபகரிப்பு பிணக்குகள் தொடர்பில் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு நேற்றைய பேச்சுவார்த்தையின் போது சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் அது நடைமுறைப்படுத்தப்பட்டால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு ஜனாதிபதி இணங்கவில்லையெனவும் சுமந்திரன் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...