யாழ். மாவட்டத்தில் மே 16, 17 இல் விசேட செயற்திட்டம்!

Date:

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போதைய வானிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்காதுவிடின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் மாதங்களில் அதிகரித்துச் செல்லும் என அஞ்சப்படுகின்றது.

சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகம் இணைந்து கழிவு நீர் தேங்கிநிற்கும் பொருட்களை உரிய முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இச் செயற்திட்டம் தொடர்பான கால அட்டவணை கிராமசேவகர் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். எனவே பொதுமக்கள், பொது அமைப்புக்கள் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ். மாவட்ட செயலகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...