இந்திய விமானப்படையின் தலைமை தளபதியும், இலங்கை கடற்படை தளபதியும் சந்திப்பு!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதரி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின்பேரில் இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள்  மே 01ம் திகதி கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வந்தடைந்த்தார்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதிக்கு கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் தலமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு கூட்டு பயிற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புகள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னம்களும் பரிமாறப்பட்டதுடன் இந்திய விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...