இன்று எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்?

Date:

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 333 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 375 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை 325 ரூபாவில் இருந்து 310 ரூபா வரை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 330 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...