இலங்கை ஜூன் மாதத்திற்குள் இறக்குமதி தடையை நீக்கும்: ஐரோப்பிய ஒன்றியம்

Date:

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்திற்க் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு (EU) அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 நடைபெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வின் போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் விளைவாக 2020 இன் பிற்பகுதியில் இறக்குமதிக்கு தடையை விதித்த இலங்கை பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக தடையை நீடித்தது.

இலங்கையின் இரண்டாவது பாரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியம், இந்தத் தீர்மானத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தனது வர்த்தகப் பங்காளிகளுக்கு நியாயமற்றதாகக் கருதப்படும் பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லுமாறு இலங்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வெளிப்படுத்தியது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...