ஜனாதிபதி தலைமையில் நாளை 14வது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு!

Date:

30 வருடகால யுத்தத்தின் போது உயிரிழந்த தேசத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு நாளை (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

ரணவிரு சேவா அதிகாரசபையானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த ரணவிரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

போர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது ,
நாட்டின் போர் வீரர்களை நினைவு கூரும் இந்தவிழா பெருமைக்குரியது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காக்க தம் இன்னுயிர்களை தியாகம் செய்த பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் மாவீரர்களை நினைவுகூரும் வகையில், இங்கு விசேட போர்ப்பறை இசையும் மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளதாக கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தேசிய போர்வீரர் நினைவேந்தலில் பங்குபற்றவுள்ளனர். இறந்த போர்வீரர்களுக்கு நினைவு ஆடைகள் வழங்கப்படுவதுடன், அனைத்து பௌத்த மற்றும் பிற மத சடங்குகளும் இங்கு நடத்தப்படும்
பின்னர் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும்.இங்கு முப்படை அணிவகுப்பு நடத்தப்பட்டு இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் உரைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...