இஸ்ரேலியப் படையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
45 வயதான காதர் அட்னான் எனும் இவர், பலஸ்தீன ஆயுதக்குழுவுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டுகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னரும் 12 தடவைகள் கைதுசெய்யப்பட்டு நீண்ட நாட்கள் சுமார் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை அவர் ஆயுதக்குழுக்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்கான எதுவித ஆதாரத்தையும் இஸ்ரேல் முன்வைக்கவில்லை.
இதுவரை காலமும் சுமார் எட்டு வருடங்களுக்குமேல் அவர் தடுப்புக்காவலில் கழித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் வழக்குவிசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்படும் போது, உண்ணாவிரதம் மூலமாக அவர் எதிர்ப்பை வௌிக்காட்டத் தொடங்கும்போது விடுதலை செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.
அதே வழிமுறையைக் கையாண்டு இம்முறை 86 நாட்களாக இவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் 87வது நாள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அவரது இறுதி வார்த்தைகளாக “எனது கொழுப்பு, சதை மற்றும் எலும்புகள் கரைந்துவிட்டன, மேலும் எனது அன்பான ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நகரமான ரம்லாவில் என் சிறையிலிருந்து என் வலிமை பலவீனமடைந்ததால் எனது இந்த வார்த்தைகளை உங்களுக்கு அனுப்புகிறேன்.”
கடந்த ஒருவார காலமாகவே அவர் உடல் நிலை மோசமடைந்து காணப்பட்டுள்ளது. அது குறித்து அவரது உறவினர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். எனினும் நீதிமன்றம் அவரது விடுதலை தொடர்பில் பராமுகமாக இருந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை காதேர் அட்னன் எ உணர்விழந்து காணப்பட்டார் என இஸ்ரேலிய சிறைச்சாலைகள் சேவை தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதம் இருந்தன் நேரடி விளைவாக மரணித்த முதல் பலஸ்தீனியர் அட்னான் என பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய பலஸ்தீனக் கைதிகள், வலிந்து உணவூட்ட முயற்சிக்கப்பட்டதன் விளைவாக உயிரிழந்திருந்தனர் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அட்னானின் ஆரோக்கிய நிலை தீவிரமானதாக இருந்தபோதிலும், அவரை விடுதலை செய்ய மறுத்தனாலும், மருத்துவ ரீதியாக புறக்கணித், சிறைக்கூண்டில் வைத்திருந்ததாலும், அட்னின் மரணம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலை என பலஸ்தீனப் பிரதமர் மொஹம்மத் ஷ்தாய்யே விமர்சித்துள்ளார்.
அட்னின் மரணத்தையடுத்து, பலஸ்தீனியர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கின்றனர். மேற்குக்கரையில் கடைகள் மூடப்பட்டன.
இதேவேளை, காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ரேலை நோக்கி 3 ரொக்கெட்கள் எவப்பட்டன. இதனால் எவரும் காயமடையவில்லை இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.