ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் மனு தாக்கல்!

Date:

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு (10) புதன்கிழமை  அன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றினை (SC SD 19/2023) தாக்கல் செய்துள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல்எ திர்ப்பு மசோதாவினை TISL நிறுவனம் வரவேற்கும் அதேவேளை, இந்தமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகளை சவாலுக்குட்படுத்தி இவை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அதனூடாக இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TISL நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவின்பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட 37 சரத்துகளை சவாலுக்குட்படுத்தியுள்ளது.

(முழுமையான மனுவினை இங்கே பார்வையிடுங்கள்: http://www.tisrilanka.org/tisl-files-a-petition-with-the-supreme-court-challenging-the-anti-corruption-bill/

இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள்/விதிகள் முறைகேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள் (whistleblowing), தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் சார்ந்த விடயங்களையும் பாதிக்கலாம் என்றும் TISL நிறுவனம் குறித்த மனுவினூடாக குறிப்பிட்டுள்ளது.

இந்தமனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். சட்டத்தரணி நிலுகா திஸ்ஸாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான புலஸ்தி ஹேவாமான்ன, கித்மி விஜேநாராயண, பாதிலா பய்ரூஸ், பியூமி மதுஷானி, ஹரினி ஜயவர்தன, லசந்திக்க ஹெட்டியாராச்சி மற்றும் சங்கிதா குணரத்னஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கானது நாளை (மே 12) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...