எதிர்க்கட்சித் தலைவரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி!

Date:

இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகில் நிலைநாட்டப்பட்ட தோற்கடிக்க முடியாத தத்துவத்தை உலகுக்கு அருளியவர். பிரபஞ்சத்தில் உள்ள பூரண உண்மையைக் கண்டு, புத்தபிரான் உபதேசித்த ஸ்ரீ சதர்மம் நிரந்தரமானது என்பதை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறது.

பௌத்த சகாப்தம் எப்பொழுதும் பௌதிக வாழ்க்கையை போஷித்து, அதன் அடிப்படையில் ஆழ்நிலை வாழ்க்கையை வளர்க்க நடைமுறைச் செயல்களின் ஒழுங்கைக் காட்டியுள்ளது. மேலும் அந்தக் கண்ணோட்டத்தில், பௌத்தம் மிகவும் அடிப்படை மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையாகும்.

தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த புத்தர்,

“யோ தம்மன் பஸ்ஸதி, ஸோ மன் பஸ்ஸதி

யோ மன் பஸ்ஸதி ஸோ தம்மன் பஸ்ஸதி ”.

எவன் தர்மத்தைப் பார்க்கிறானோ அவன் என்னைப் பார்க்கிறான். எவன் என்னைப் பார்க்கிறானோ அவன் தர்மத்தை பார்க்கிறான்.

புத்தபெருமானின் தர்மம் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் தனித்துவம் மிக்க கருணை நிரம்பிய தர்மமாகும். மனித இனம் முழுவதற்கும் இணக்கமான நடைமுறையை வழிநடத்தும் தூய தர்மத்தால் ஈர்க்கப்பட்டு, மனித நேயத்துடன் மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் இருந்தால், அவர்கள் பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் ஆவர்.

எனவே, உலகின் மிகப் பெரிய தர்மத்தில் தஞ்சம் புகுந்த உன்னத குடிமக்களாக, உலக உயிரினங்கள் மீது கருணை, பாசம் மற்றும் அன்புடன் மகத்தான வெசாக் நாட்களைக் கொண்டாடுவோம்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...