ஐக்கிய இராச்சியத்தின் மிக எளிமையான வாக்குமுறைமை பற்றி கூறும் நம் நாட்டின் பிரபல கல்வியியலாளர் இல்ஹாம் மரிக்கார்!

Date:

முதல் முறையாக வெளிநாட்டில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததையிட்டு இலங்கையின் கல்வியியலாளர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

ஐக்கிய இராச்சியத்தின் (லண்டன்) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நேற்றையதினம் (04) நடைபெற்றது. இதில் 230 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8000 ஆசனங்களுக்கான போட்டியில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தல் வாக்களிக்கும் முறை மிகவும் அமைதியான முறைமையில் இடம்பெற்றிருந்ததுடன் பதாகைகள் இருக்கவில்லை, பாதுகாப்பு ஒன்றும் இல்லை, வாகன நெரிசல் இல்லை, கூட்டம் அறவே இல்லை. காரணம் பல தொகுதிகளில் பல வாக்கு சாவடிகள் காணப்பட்டன.

அதுமட்டுமில்லாமல் பாதைகள் மூடப்பட்டிருக்கவில்லை, தேர்தல் நடப்பது போன்ற ஒரு அறிகுறியும் இல்லை, வாகன நெரிசலோ போக்குவத்து ஏற்பாடுகளோ இருக்கவில்லை, ஒரு சிறிய Container Box உள்ளே, இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே இருந்தனர்.

மிகவும் எளிமையான காகிதம் மூலமான வாக்குச்சீட்டு காணப்பட்டதுடன் இரண்டு கட்சிகளின் பெயர்களும் மாத்திரமே, ஒரு கட்சியில் 3 வேட்பாளர்கள் சகிதம் 6 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே காணப்பட்டது. ஒருவர் ஒரு கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்கலாம்.

அந்த கட்சியின் 3 வேட்பாளர்களுக்கும் தெரிவு வாக்குகளை போடலாம். வழமையான வாக்கு இடாப்பில் பெயரை பார்த்த பின்னர் அடையாள அட்டை உறுதிசெய்யப்பட்டு, Ballot paper  வழங்கப்பட்டிருந்தது.

எனவே லண்டனில் இடம்பெற்ற இந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறைமை வியக்க வைக்கும் வகையில் காணப்பட்டதாக கல்வியியலாளர் இல்ஹாம் மரிக்கார்  தனது அனுபவத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...