நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 300 – 400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்…
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அதிகரிப்பைக் காண்பிக்கிறது. மேல் மாகாணம் உட்பட மேலும் சில மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ளார்