கனடாவில் தொழுகையை நிறுத்தச் சொன்ன பாதுகாப்பு அதிகாரிக்கு பணி இடைநீக்கம்!

Date:

கனடாவில் உள்ள ரயில் நிலையத்தில் முஸ்லிம் நபரொருவருக்கு தொழுகையை நிறுத்துமாறு  கூறிய பாதுகாவலர் அவரது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தன்னை அஹ்மத் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த பயணி இதுதொடர்பில் தெரிவித்திருப்பதாவது,

கனடாவின் வயா ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் துணை பாதுகாவர் ஒருவர், தான் தொழுகை செய்து முடித்தவுடன் தன்னிடம் வந்து “இங்கே பிரார்த்தனை செய்ய வேண்டாம்” என்று கூறினார்.

“இங்கே பிரார்த்தனை செய்ய வேண்டாம். நீங்கள் இங்கே பிரார்த்தனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் மற்ற வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள், இது சரியா? அடுத்த முறை வெளியில் பிரார்த்தனை செய்யுங்கள்.” என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தருணத்தை அந்த ரயிலில் இருந்த ஏனைய பயணிகள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த காணொளி, வைரலாக பரவியது மற்றும் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

இது தொடர்பாக வயா ரயில் நிலையத்துக்கு பொறுப்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

குறித்த அறிக்கையில், “வயா ரயிலின் ஒட்டாவா நிலையத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவரை இவ்வாறு இழிவு படுத்தியது வருந்தத்தக்கது.

வழிபாட்டுத் திறன் உட்பட, மதச் சுதந்திரத்தை, பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும்“ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பயணி, இந்த சம்பவத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தன்னுடைய தனிப்பட்ட கருத்து பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வயா ரயிலில் அவ்வாறு நடந்து கொண்ட குறித்த பாதுகாப்பு அதிகாரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...