கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதப் பகுதியானது அதற்குள் முழுமையாக புனரமைக்கப்படும் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு ரயில்வேயின் இரண்டாம் கட்டம் அனுராதபுரத்திலிருந்து மஹவ வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு புகையிரத பாதையில் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் வழமை போன்று புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.