கொவிட் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

Date:

கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைடைந்ததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகிறது.

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களில், கொவிட் வைரஸை எதிர்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களிடையே உருவாகியுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.

கடந்த 03 ஆண்டுகளில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தமையினால், உலக சுகாதார ஸ்தாபனம்  கொவிட் தொற்றுநோயை அவசர நிலைமையாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், கொவிட் -19 இன் தற்போதைய பரவலைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக் குழு, இது இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என்று அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நாளாந்தம் சுமார் 06 கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், அது ஆபத்தான நிலைமையல்ல என தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிதி கினிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...