சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

Date:

இலங்கையில், எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.

இதனையடுத்து, சினோபெக் நிறுவனம் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், இதனை மறுத்துள்ள சினோபெக் நிறுவனம், தமது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரை தொடர்பு கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது எரிவாயு நிலையங்களுக்கான சேவை உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...