சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
16 வயது சிறுமியின் மரணம் மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர் 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து, ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.