சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Date:

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய இரு தரப்பினரும் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

சூடான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போரிடும் இரண்டு தரப்பும் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், தப்பியோடிய பொதுமக்களை பாதுகாப்பாகக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கார்ட்டூமில், மேலும் மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு தொடர்ந்தும் போராடிவரும் சூழலில் போக்குவரத்துச் செலவு அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது எப்படி என்பதை ஆராய்வதற்காக தான் அப்பகுதிக்குச் செல்வதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...