செர்பியாவில் 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Date:

செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கடந்த 3 ஆம் திகதி 13 வயது பாடசாலை மாணவன் தன் சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய மறுநாளே தென்பெல்கிரேடில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் செர்பியாவை அதிரவைத்தது.

இந்தநிலையில் செர்பியாவில் உள்ள பாடசாலைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 78 ஆரம்ப பாடசாலைகள், 37 உயர் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...