டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன: கொழும்பில் அதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை!

Date:

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் டெங்கு நோய் பரவி வருகின்ற போதிலும், கொழும்பு நகரில் தொடர்ந்தும் டெங்கு அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கொழும்பிற்கு வெளியில் உள்ள பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதில் கொழும்பில் 4.8 வீதமானவர்கள் மாத்திரமே காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மொரட்டுவை, இரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரசாயனங்கள் கிடைக்காததுடன் சம்பள குறைபாடு காரணமாகவே மெடங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான புகையூட்டல் நடவடிக்கைகள் மாலை 4.00 மணிக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும், மேலதிக நேரம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் பொது சுகாதார பரிசோதகர்களின் சாரதிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் புகைமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மாதாந்தம் 1200 ரூபா எரிபொருள் கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும், அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிக்குமாறு அரசாங்கம் சுற்றறிக்கைகளை வெளியிட்டிருந்த போதிலும், இதுவரையில் அவ்வாறான குழுக்கள் ஸ்தாபிக்கப்படவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய மழை நிலைமை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதுடன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் டெங்கு பதிவுகள் மற்றும் 75 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...