துருக்கி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கு பதிவில் 6.41 கோடி பேர் பங்கேற்பு

Date:

இன்று துருக்கில் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெறுகின்றது. துருக்கி நாட்டில் அதிபராக ரசெப் தயீப் அர்தூகான் பதவி வகித்து வருகிறார்.

நீண்ட காலம் அந்த பதவியில் பிரதமராக பதவி வகித்து வரும் சூழலில், 600 இடங்களை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

அர்தூகானை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளராக கெமல் கிலிக்டாரொகுலு போட்டியிடுகிறார்.

நாட்டில் மக்கள் வாக்களிப்பதற்காக, மொத்தம் 1 இலட்சத்து 91 ஆயிரத்து 885 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 5 மணிவரை மக்கள் வாக்களிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் 6.41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இவர்களில் 19.2 இலட்சம் பேர் வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் முன்பே வாக்களித்து விட்டனர்.

இதில் அர்தூகான் 49.50 சதவீத வாக்குகளும் கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

வெளிநாடுகளில் நடந்த இந்த தேர்தல் கடந்த புதன்கிழமை (மே 24) வரை நடந்தது. இன்று நடைபெறும் தேர்தல், தங்களது வாழ்வின் மிக முக்கிய தேர்ந்தெடுத்தலாக இருக்கும்.

நாடு மற்றும் குழந்தைகளின் வருங்காலம் பற்றி கவனத்தில் கொண்டு எடுக்க கூடிய ஒரு முடிவாக இருக்கும் என அர்தூகான்  மக்களிடம் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி வேட்பாளரான கிலிக்டாரொகுலு கூறும்போது, முதன்முறையாக, இரு வேட்பாளர்கள் மற்றும் இரண்டு உலக பார்வைகளை கொண்ட நபர்களில் ஒருவரை துருக்கி நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...