நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

Date:

இலங்கையிலிருந்து 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 86 நோயாளர்களும், கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 48 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 36 நோயாளர்களும், ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 218 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஏனைய 21 மாவட்டங்களில் இருந்து 282 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொழுநோயைக் குணப்படுத்துவதற்கு மிகவும் வெற்றிகரமான மருத்துவ முறைகள் இருந்தும், சமூகத்தில் இன்னும் நிலவும் தவறான எண்ணங்களால், பல நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை கிளினிக்குகளுக்குச் செல்லாமல் தங்கள் நிலையை மோசமாக்கியுள்ளனர்.

இந்த நோய்க்கு முறையான சிகிச்சை அளித்தால், ஆறு மாதங்களுக்குள் குணமாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....