நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்

Date:

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் பெரேராவின் உடலம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரதேச செயலாளரை கடமை நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக உத்தியோகபூர்வ காரில் பிரதேச செயலாளர் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அவரது சாரதி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது, குறித்த சாரதி அவரது சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஏனைய உத்தியோகத்தர் மற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அறிவித்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணித்தவரின் உடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...