புத்தளம் மாவட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை சிறப்பாக முன்னைடுத்து வரும், புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் ,
பாலாவி வூடப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் சர்வ மதத் தலைவர்களான சங்.புத்தியாகம ரதன தேரர், சுந்தர ராமா குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அருட்தந்தை ஜெயராஜ் உட்பட அமைப்பின் சகல மதங்களையும் சேர்ந்த அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமைப்பின் இணைப்பாளர், திருமதி.முஸ்னியா நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்.