இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனமுற்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.
இவர் 2001 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் பிரதிச் செயலாளர் நாயகமாகவும் பதவி வகித்திருந்தார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்து, றிஷாத் பதியுதீன் தலைமையில் அக்கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்தார்.
வர்த்தக, வாணிப, கைத்தொழில், அமைச்சின் ஆலோசகராகவும் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம், அசோக் லேலண்ட் நிறுவனம் என்பவற்றின் தலைவராகவும் பதவிகளை வகித்திருக்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளது.