வழி கேட்கவந்த 14 வயது சிறுவனுக்கு நடந்த துயர சம்பவம்!

Date:

குருநாகல் – யந்தம்பலாவ நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சிறுவன் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு தனது மைத்துனரை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட வேளையில் அறியாமை காரணமாக தவறான பேருந்தில் ஏறியுள்ளது.

இதனையடுத்து, அவர் குருநாகல் நகருக்கு செல்லும் வழியை அறிவதற்காக அருகில் உள்ள நிதி நிறுவனமொன்றுக்கு சென்றபோது, அங்கு பணிபுரிந்த மூன்று ஊழியர்களால் அவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சம்பவத்தையறிந்த அப்பகுதி இளைஞர்கள் நிதி நிறுவனத்தை சுற்றி வளைத்ததுடன், சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

எனினும், குறித்த மூன்று சந்தேக நபர்களும் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தனர். இந்தநிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...