வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பணிக்கு திரும்ப அனுமதி!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் மாவட்டத்தைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சிப் பிரிவில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தல் நடத்தப்படும் வரை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புரவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்தரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நேற்று (02) குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...