IPL 2023: ஐதராபாத் அணியை வீழத்தியது கொல்கத்தா!

Date:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டத்திலும் ஜேசன் ராய் 20 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் நிதிஷ் ரானா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 31 பந்தில் 42 ஓட்டத்திலும் வெளியேறினார்.

ஆண்ட்ரூ ரசல் 24 ஓட்டம், சுனில் நரைன் 1 ஓட்டம், ஷர்துல் தாக்குர் 8 ஓட்டத்திலும் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 46 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை சேர்த்தது.

இதையடுத்து, 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ஓட்டங்களும் அப்துல் சமாத் 21 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 20 ஓட்டங்களும், மயங்க் அகர்வால் 18 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களும், மார்கோ ஜான்சன் ஒரு ஓட்டமும் எடுத்தனர்.

புவனேஷ்வர் குமார் 5 ஓட்டங்களுடன் , மயங்க் மார்கண்டே ஒரு ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...