இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 3,750 இலங்கையர்கள் மக்கா செல்ல அனுமதி

Date:

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்த ஹஜ் கோட்டாவை விட கடந்தாண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், இலங்கையர்கள் இந்த ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் முதல் குழு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

புனித நகரமான மக்காவில் ஹஜ் செய்வது இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...