இந்திய மருந்தை கறுப்பு பட்டியலுக்குள் இணைக்க நடவடிக்கை !

Date:

இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ‘பிரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து தொடர்பில் பல சிக்கல்கள் பதிவாகியதையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதனை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது.

இந்தநிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், இந்த கண் சொட்டு மருந்து மாசுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த மருந்துக்கான கொள்வனவு கட்டணத்தை செலுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோனுக்கு பதிலாக மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தி தற்போது கண் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...